முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்கொடுத்தவணிதம் கிராமத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தூய்மையற்ற இடங்கள் : கலெக்டர் இல.நிர்மல்ராஜ் பார்வையிட்டு அபராதம் விதித்தார்

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் - கண்கொடுத்தவணிதம் கிராமத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தூர்மையற்ற இடங்களை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 அபராதம் விதிப்பு

கண்கொடுத்தவணிதம் கிராமத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தனியார் குடியிருப்பு வீட்டை சுற்றி பழைய டயர்கள் இருந்ததை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு சுற்றுப்புறப்பகுதிகளுக்கு டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்ததால் சுரேஷ் என்பவருக்கு ரூ.1000-மும்,ஜெகதீசன் என்பவருக்கு ரூ.500-ம் அபராதம் விதித்தார்.தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திவரும் ஊராட்சி மேல்நிலைநீர்த் தேக்க தொட்டி குடிநீரை குளோரின் பரிசோதனை செய்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பொதுமக்களிடம் டெங்கு கொசு டயர், திறந்து கிடக்கும் பிளாஸ்டிக் டிரம்கள்,அப்புறப்படுத்ததாத ஆட்டுக்கள் உரல் ஆகியவற்றால் உற்பத்தியாகிறது என்பதையும், நன்னீரில் மட்டுமே உற்பத்தியாகிறது என்ற தகவலையும் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது... தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட பட்டியலில் திருவாரூர் மாவட்டம் நான்காவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் தூய்மைற்ற நிலையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் உள்ள இடங்களை ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இதுவரை 2289 நபர்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 8 லட்சத்து 67 ஆயிரத்து 250 ரூபாய் அபராதம்; விதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 11 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் 9 நபர்கள் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், 2 நபர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஆவர் என்றார். இவ்வாய்வில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் துணை இயக்குநர் மரு.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து