முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாணதிரையான்பட்டினம், உதயநத்தம் ஊராட்சிகளில் டெங்கு விழிப்புணர்வு பணிகள் : கலெக்டர் க.லட்சுமி பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், வாணதிரையான்பட்டிணம் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, ஆய்வு செய்து, பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக சுகாதாரமாக சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும் எனவும், காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் காண்பித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்கள்.

அறிவுறுத்தல்

வாணதிரையான்பட்டிணத்திலுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் நீர்தேக்கத் தொட்டியினை முறையாக பராமரிக்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்து, மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்கள்.பின்னர், தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் கல்வித் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்கள். மேலும், அங்கிருந்த அங்கன்வாடி மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இப்பள்ளியிலுள்ள தண்ணீர்த் தொட்டியை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தண்ணீர்; தொட்டியை நாள்தோறும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, உத்தரவிட்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து