முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக முதியோர் தினவிழா நிகழ்ச்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், சமூக நலத்துறை மற்றும் பிலாங்காலை புனித சூசையப்பர் முதியோர் இல்லம் இணைந்து நடத்திய, உலக முதியோர் தினவிழா நிகழ்ச்சி, (அக்டோபர் 1-ம் தேதி) பிலாங்காலை, புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  , தலைமையேற்று,  குத்துவிளக்கேற்றி வைத்து, தலைமையுரையில் தெரிவித்ததாவது:-தமிழக அரசு, சமூகநலத்துறை மூலம், முதியோர்களுக்காக, பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.   குறிப்பாக, சமுதாயத்தில் முதியோர்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், அவர்களை அன்போடு அரவணைக்க வேண்டும் என்றும், சமூகநலத்துறையின் மூலம் பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி, தமிழக அரசு, என்றும் மக்களின் காவலனாக இருந்து வருகிறது.  அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம், முதியோர்கள் அளிக்கும் புகார்கள் மீது,  விசாரணை மேற்கொண்டு, குற்றம் செய்திருந்தால்,  மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  

பல்வேறு நிகழ்ச்சிகள்

எனவே, முதியோர்கள் தங்களது புகார்களை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.  மேலும், முதியோர் இல்லத்தில் உள்ள சகோதரிகள் அவர்களுக்கு தேவைப்படும் போது, உடல்நல பரிசோதனைகள் செய்வதோடு, அவர்களை மிகவும் அன்போடு அரவணைத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர்  தெரிவித்தார்.  பின்னர், கலெக்டர் , பிலாங்காலை புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தில் உள்ள 67 முதியோர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கி, பரதநாட்டியம் ஆடிய பாட்டி லூர்து,  குழு நாடகம் நடத்திய  வர்கிஸ் குழுவினர், மாத்தார் முதியோர் இல்லத்தின் குழுவினர்,  சேகர் தாத்தா குழுவினர், குழு பாடல் பாடிய                    லூக்காஸ் குழுவினர், மாத்தார் முதியோர் இல்லத்தின் குழுவினர், கும்மியாட்டம் ராணி குழுவினர், கவிதை பேசிய  மரிய அந்தோணி, கோலாட்டம் நிகழ்த்திய மாத்தார் முதியோர் இல்லத்தின் குழுவினர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, அவர்க ளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.   

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் பி செல்வி பியூலா, சமூகநல அலுவலர் (ஓய்வு)  விமல்டா டெய்சி, அருட்பணி. ஏசுதாஸ், புனித சூசையப்பர் மாகாண தலைவி மதர் றோஸ் பிரான்சிஸ், தக்கலை ஆஷா மருத்துவமனை மரு. இந்திரா ஜெங்கின்ஸ், அருட்சகோதரி. அஞ்சனா ஜோஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து