ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் திப்புசுல்தான் பிறந்த நாள் விழா

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      கிருஷ்ணகிரி
hsr1

 

ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் திப்புசுல்தான் பிறந்த நாள் விழா தமிழகத்திலேயே முதன் முதலாக ஓசூரில் நேற்று கொண்டாடப்பட்டது. முதல் சுதந்திர போராட்ட வீரர் தென்னிந்தியா பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு தன் உயிரை தியாகம் செய்தவர்.

பிறந்த நாள் விழா

இவரின் பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ராம் நகர் அண்ணா சிலை அருகில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் சாதிக்கான் அனைவரையும் வரவேற்று பேசினார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளீதரன்,அக்பர்,நகர தலைவர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா முடிவில் ஜீலன்பாஷா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சின்னகுட்டப்பா,நாகராஜ்,கார்த்திக்,ரவிகுமார்,ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து