டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்கள் அகற்றம் கலெக்டர் கு.ராசாமணி நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      திருச்சி
Trichy 2017 11 14

திருச்சி மாநகராட்சி கோ-அபிசேகபுரம் கோட்டம் 52 வது வார்டு தெற்கு ராமலிகம் நகர் 1 முதல் 5 வரை உள்ள தெருக்களில் தற்காளிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் டெங்கு கொசு உற்பத்தியாகுவதை வீடுகளில் உள்ள குப்பைகளை அப்புரபடுத்தி அபேட்மருந்து தெளித்து , புகைமருந்து அடிக்கும் பணி நடைபெற்றுவருவதை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி அவர்கள், மாநகராட்சி ஆணையர் ந. இரவிச்சந்திரன் இன்று (14.11.2017) ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்.

 விழிப்புணர்வு

அப்போது 52 வது வார்டு தெற்கு ராமலிகம் நகர் மெயின்ரோட்டில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட கலெக்டர் அவர்கள் ஆய்வுசெய்ததில் இந்த கட்டிடத்தில் அதிகளவில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டதில் டெங்கு கொசு உருபத்தியாகும் கொசுபுழுக்கள் அதிகஅளவில் காணப்பட்டது உடனடியாக கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொண்டு அளிக்கப்பட்டது.

இக்கட்டட உரிமையாளர் சிவக்குமார் அவர்களுக்கு ரூபாய 50,000 அபதாரம் விதிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற கொசுபுழுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க சுத்தமாக வைத்துகொள்ள உத்தரவிட்டார்கள். குறிப்பாக புதிய கட்டிடங்கள் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் உள்ள தற்காலிக தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றில் கொசு புழு உற்பத்தியாவதை கட்டிட உரிமையாளர்கள் உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை தவிற்க்கும்மாறும் , காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு பொது மருத்தவனைக்கு செல்லும்மாறும் கலெக்டர் கு.ராசாமணி தெரிவித்தார். இந்த ஆய்வில் நகர் நல அலுவலர் டாக்டர் ஆர். சித்ரா, சுகாதார அலுவலர் எம். தலைவிருச்சான், உதவி செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்ரமணியன் மற்றும் இளநிலை பொறியாளர், சுகாதார மேற்பார்வையாளர்கள் உடன்னிருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து