முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் அரசு முடிவு

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜனவரி 1 முதல் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை எளிமைப்படுத்துவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

எளிமைப்படுத்துதல்...

2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல்  இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை எளிமைப்படுத்துவதாகவும் குறுகிய நாட்களில் பல முறை செல்லக்கூடிய விசா வழங்க உள்ளதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசின் விசா எளிமைப்படுத்துதல், அடிக்கடி ஜப்பான் செல்லும் இந்தியர்கள் மற்றும், தொழிலபதிர்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு பயனளிக்கும் என்று  இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

புதிய விசா எடுக்க...

இது குறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ கடந்த ஒரு ஆண்டில் அதிகபட்சமாக இரண்டுமுறை ஜப்பான் சென்றவர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க மற்றும் 90 நாட்கள் ஜப்பானில் தங்கி கொள்ளும் வகையிலான புதிய விசா எடுத்து கொள்ளலாம்.இந்த புதிய விதிகள் சுற்றுலா பயணிகள் வணிகர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களுக்கு விலக்கு

 எளிமைப்படுத்தப்பட்ட விசா விதிமுறைகளின் படி, விசா விண்ணப்ப ஆவணங்களில், பலமுறை பயணிக்கும் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, வேலைவாய்ப்பு சான்றிதழ் மற்றும் விளக்க கடிதம் ஆகிய இரண்டுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பலமுறை நுழைவு விசாவுக்கு விண்ணப்பிக்கையில், பாஸ்போர்ட் விசா படிவம், நிதி திறன்(சுற்றுலா செல்பவர்களுக்கு), நிறுவனங்களுடன் தொடர்புடையதற்கான உறுதி ஆவணங்கள் (வணிக நோக்கில் செல்பவர்களுக்கு)ஆகியவற்றை வழங்கினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், ஜப்பானுக்கு ஒருமுறை பயணிக்கும் இந்திய மாணவர்களுக்கு, விசா விண்ணப்ப விதிமுறைகளை எளிமைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து