நேரு யுவ கேந்திரா சார்பில் மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி கலெக்டர் சஜ்ஜன் சிங் ரா.சவான் பங்கேற்பு

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      கன்னியாகுமரி
kanyakumari collector

கன்னியாகுமரி மாவட்டத்தைப் போல் ஜம்முவை கல்வியில் மேம்படுத்த இளையோர் ஒத்துழைக்க வேண்டும்  -   குமரிக்கு வருகை தந்த 50 ஜம்மு காஷ்மீர் இளைஞர்களிடம் கலெக்டர் சஜ்ஜன் சிங் ரா.சவான் கூறினார்.  தமிழ்நாடு மாநில அளவில் நேரு யுவ கேந்திரா சார்பில் நடை பெறும் மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஜம்மு க்ஷ காஷ்மீர் மாநிலத்திலிருந்து 50 இளையோர்கள் குமரிக்கு வந்துள்ளனர்.  இவர்கள் இன்றும், நாளையும் நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களைச் சுற்றி பார்த்தும் குமரி மாவட்ட இளையோருடன் கலந்துரையாடியும் இப்பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.  

பரிமாற்ற நிகழ்ச்சி

மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பாpமாற்ற நிகழ்ச்சியின்போது, ஜம்மு - காஷ்மீர் இளையோர்கள் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள நாஞ்சில் ஹாலில் நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு நேரு யுவ கேந்திரா சங்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநில இயக்குநர் சதீஸ் தலைமையேற்றார்.  காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர்  செந்தில் குமார் முன்னிலை வகித்தார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெறும் மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியாக இதுவே முதல் முறை நடத்தப்படுவதால் இது பெரிதும் வரவேற்க தக்க நிகழ்ச்சியென்றும் இதில் பங்கு பெறும் இளையோர்கள் பேறுபெற்றோர் என்றும் பாராட்டியதோடு, தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது் இந்த மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்ச்சி.  வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது தேசத்தின் முக்கியத்துவத்தை இன்னும் மேம்படுத்தும் நிகழ்ச்சியாகும்.  இது மாநிலங்களைக் கடந்து இளையோர்களிடையே ஒற்றுமையையும், ஒமைப்பாட்டையும் ஏற்படுத்தும் ஒரு உன்னத நிகழ்ச்சியாகும்.  இதன் வாயிலாக இளையோர்கள் ஒருவருக்கொருவர் தமது பகுதியிலுள்ள, மாநிலத்திலுள்ள, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், விவசாயம், கல்வி முறைகள், பலதரப்பட்ட வாழ்வியல் ஆதாரங்கள், சுற்றுப்புற சுகாதாரம் போன்றவற்றைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு வழிசெய்கிறது.மேலும்,  கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இது தமிழ்நாட்டிலேயே கல்வியில் சிறந்த மாவட்டம்.  இளையோர்கள் கல்வியிலும், சுயதொழில் மேம்பாட்டிலும் மிகவும் ஆர்வம் காட்டுகிறவர்கள்.  அவர்களது வளர்ச்சிக்காக மாவட்ட நிர்வாகமும் தமது கடமையைச் சிறப்பாகச் செய்து வருகிறது.  குறிப்பாக இளையோரின் வேலை வாய்ப்புக்காக  “ஜhப் மேளா” க்கள் நடத்தி,  அதன் வாயிலாக,  70-க்கும் மேற்பட்ட கம்பெனிகளிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆற்றல் மிக்க இளையோரைத் தொpவு செய்யவும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு  வழங்கவும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது.  இதுபோல ஜம்முவிலும் மாவட்ட நிர்வாகம் கல்வி வளர்ச்சிக்கும் இளையோர் மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்துவதற்கு இளையோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  குமரி மாவட்டத்திலுள்ள இளையோர்கள் வேலைவாய்ப்புக்காக, சென்னை, கோயம்புத்துர், பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்றும் தமக்கான வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளுகிறர்கள். அரசே எல்லோருக்கும் வேலை வாய்ப்பு வழங்குதல் என்பது இயலாதது.   எனவே, இளையோர் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி கொள்வதற்கு அரசோடு இணைந்து செயல்பட்டால் ஒவ்வொரு மாநிலமும் விரைவில் முன்னேற்றமடைய முடியும்.  எனவே இம்முகாமில் கலந்து கொண்டுள்ள இளையோர்கள் ஜம்முவிலும்  முன்னேற்றமான காரியங்களை மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் இளையோர்களின் கேள்விகளுக்கும்  நேர்த்தியான பதில்களைக் கொடுத்து அவர்களை  மகிழச்சிபடுத்தினார்.  இம்மாதம் 6-ம் தேதி சென்னையில் தமிழக ஆளுநரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியானது இம்மாதம்  18-ம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து