எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது
உதவித்தொகை
மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 15 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்; குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 242 என மொத்தம் 257 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்; சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் சீர்காழி வட்டம், 92.கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த இளமதி கபெ கலியமூர்த்தி என்பவர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையொட்டி அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும், 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற ஆணையினையும், 3 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் பெற ஆணையினையும் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், வழங்கினார். இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |