Idhayam Matrimony

கிருஷ்ணகிரி அருகே 12 ஆண்டுகளுக்கு பிறகு படே தலாவ் ஏரி நிரம்பியது: கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2005 ம் ஆண்டிற்கு பிறகு சரியான மழை பெய்யாததால் 269 ஏக்கர் பரப்பளவு கொண்ட படேதலாவ் ஏரி முற்றிலும் வரண்டு போனதால் பூசாரிப்பட்டி, கரடி குறி, போகனப்பள்ளி , கண்ணன்புதூர் , காட்டுக் கொள்ளை, ஓரப்பம் உள்ளிட 18 க்கும் மேற்பட்ட ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் விவசாயம் இன்றி, குடிக்க கூட தண்ணீர் இன்றி மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த கனமழையால் படேதலாவ் ஏரி கடந்த 12 ஆண்டுக்கு நிரம்பி கோடி போனதால் கிராம மக்கள் மகிழ்சியடைந்தனர்.மேலும் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு படேதலாவ் ஏரி நீரம்பி கோடி போனதையொட்டி ஊர் கவுண்டர்கள் பொன்னுசாமி, ரமேஷ்குமார், மாணிக்கம், ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார மக்கள் இணைந்து ஏரியின் கரையில் ஆடுகள் பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர் பின்னர் கிராம மக்கள் தெப்பம் செய்து பூஜைகள் செய்து கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தது ஏரியின் மையப்படுதிக்கு கொண்டு சென்று ஏரியில் விட்டனர்.

இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் விவசாயம் செழிக்க ஏரிக்கு மலர் தூவி வழிபட்டனர்.மேலும் கடந்த 12 ஆண்டு களுக்கு பிறகு படேதலாவ் ஏரி முழுமையாக நிரம்பியதால் பூசாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்னர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து