Idhayam Matrimony

பொது நிதிகள் குறித்து மக்களவைக்கு பிரதமர் அலுவலகம் முக்கிய உத்தரவு

திங்கட்கிழமை, 9 பெப்ரவரி 2026      இந்தியா
Parliament-2024-11-27

புதுடெல்லி, பி.எம். கேர், பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி ஆகிய குறிப்பிட்ட மூன்று நிதிகள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப முடியாது என்று பிரதமர் அலுவலகம் மக்களவைச் செயலகத்திற்குத் தெரிவித்துள்ளது.

இதற்கு இவை அரசு நிதி அல்ல என விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த நிதிகள் அனைத்தும் மக்களின் தன்னார்வப் பங்களிப்புகள் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், இவை இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து ஒதுக்கப்படுபவை அல்ல என்றும் கூறியுள்ளது. இதற்கு பிரதமர் அலுவலகம் இரண்டு விதிகளையும் மேற்கோள் காட்டியுள்ளது.

விதி 41(2)(viii): பாராளுமன்றக் கேள்விகள் இந்திய அரசின் நேரடிக் கவலைக்குரிய விஷயமாக இருக்க வேண்டும்.  விதி 41(2)(xvii): இந்திய அரசுக்கு நேரடியாகப் பொறுப்பில்லாத அமைப்புகள் அல்லது நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பக்கூடாது. என தெரிவித்துள்ளது.மேலும் இந்த நிதிகள் பொது தொண்டு அறக்கட்டளையாக  பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமை எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில், "பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் நிவாரணம், பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி குறித்த கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்ப முடியாது. இந்த உத்தரவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திலிருந்து நேரடியாக மக்களவை செயலகத்திற்கு வந்துள்ளன. இதன்மூலம் இந்த நிதிகள் குறித்து கேள்விகள் கேட்க வேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது பல தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அப்படியிருக்கையில் பொதுநலன் சார்ந்த கேள்விகளைக் கேட்பதிலிருந்து அவர்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள்?  மோடி அரசு ஏன் பொறுப்புக்கூறலுக்கு அஞ்சுகிறது? ஆயிரக்கணக்கான கோடி பொதுப் பணம் குறித்த கேள்விகளை ஏன் முடக்க வேண்டும்?   மக்களிடமிருந்து அரசு எதைமறைக்க முயல்கிறது? இனி பாராளுமன்றம் அரசியலமைப்பின்படி செயல்படுமா அல்லது மோடியின் உத்தரவுகளின்படி செயல்படுமா? இது வெளிப்படைத்தன்மை அல்ல. இது சர்வாதிகாரக் கட்டுப்பாடு. இது பாராளுமன்றத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதல். " எனக் குறிப்பிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து