பாவூர்சத்திரம் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      திருநெல்வேலி

பாவூர்சத்திரம் பகுதிகளில் நடைபெறும் டெங்கு தடுப்பு மற்றும் விழ்ப்புணர்வு பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வீடு வீடாக நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டெங்கு தடுப்பு பணிகள்

கீழப்பாவூர் யூனியன் பகுதியான பாவுர்சத்திரம், குறும்பலாப்பேரி, குலசேகரப்பட்டி, சடையப்புரம், மேலப்பாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் நடைபெறும் டெங்கு நோய் தடுப்பு மற்றும் விழ்ப்புணர்வு பணிகளை பார்வையிட நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துரி வந்தார். பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வடக்கு பகுதியான காவல் நிலைய பின்புறமுள்ள தெருக்களில் உள்ள வீடுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதே தெருவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த மாரியம்மாள் என்பவரது மகள் இசக்கி (வயது 9), ராமசுப்பிரமணியன் என்பவரது 6 மாத ஆண் குழந்தை  சுபீக்சன் ஆகிய இருவரின் பெற்றோரிடம்  டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களது வீடுகள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும் பிளாஸ்டிக் கப்புகள், தென்னை சிரட்டைகள், டயர்களை அப்புறப்படுத்த குலசேகரப்பட்டி பஞ் துப்பறவு பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு  உத்த்ரவிட்டார். இதனை தொடர்ந்து ;அந்த தெருவில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் வீடு வீடாக நேரில் சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீட்டிலிருந்த பெண்களிடம் டெங்கு கொசு உற்பத்தியாகும் விதம் அதனை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார். அதனை கேட்ட பெண்கள் இனி வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதாகவும் லார்வா புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் விதமாக மழை நீ;ர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்வதாகவும் கலெக்டரிடம் உறுதி கூறினர். பின்னர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் உபயோகமில்லாமல் ஆங்காங்கே கிடந்த கார் டயர்களையும், விபத்துகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் சிக்கி தேங்கி கிடக்கும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பெட்டிகளில் அவ்வப்போது ;பெய்யும் மழை தண்ணீh தேங்கி நிற்பதையும்  அதில் லார்வா புழுககள் உற்பத்தியாகி இருப்பதையும் பார்வையிட்டு உடனடியாக அப்புறப்படுத்தும் படி சுகாதார பணியாளர்களுக்கு உத்த்ரவிட்டார்.  இதனை யடுத்து கீழப்பாவூர் யூனியன் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கழிவறை  கோப்பைகளில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதை பார்வையிட்டு அலுவலக அதிகாரிகள் மற்றும் துப்பறவு பணியாளர்களை எச்சரித்து உடனயாக அந்த பகுதிகளை சுத்தம் செய்யும் படி கூறினார்.  கலெக்டரின் ஆய்வுப்பணியின் போது கீழப்பாவூர் யூனியன் ஆணையாளர் ஜனார்த்தனன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா, பொறியாளர்கள் பூச்சென்டு, சுப்பாராயன், பணி மேற்பார்வையாளர் திருமலைக்குமார், ஆண்டாள், முழு சுகாதாரபணிகள் வட்டார ஒறுங்கினைப்பாளர் தர்மராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இச்க்கியப்பா, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம், குலசேகரப்பட்டி பஞ் பணியாளர் வல்லாள மகாராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

பாவூர்சத்திரம் பகுதிகளில் நடைபெறும் சுகாதாரம் மற்றும் டெங்கு தடுப்பு பணிகளை கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, மதிய உணவையும் மறந்து நான்கு மணிவரை  50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வீடு வீடாக நடந்தே சென்று அங்கிருந்த பெண்களிடம் அன்பாக பேசி சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய நெல்லை மாவட்ட கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து