கேத்தி பேரூராட்சி பகுதிகளில் உதவி இயக்குநர், செயல் அலுவலர் ஆய்வு

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      நீலகிரி
22ooty-2

கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உதவி இயக்குநர் பா.ராஜகோபால், செயல் அலுவலர் போ.நடராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

நேரடி ஆய்வு

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு மற்றும் னதனியார் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பா.ராஜகோபால் மற்றும் செயல் அலுவலர் போ.நடராஜ் மற்றும் அலுவலக பணியாளர்களுடன் சேர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட காந்திப்பேட்டை, பாலாடா, சாட்கெட், கேத்தொரை, நுந்தளா மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காந்திப்பேட்டை பகுதியில் மாவட்ட நிர்வாகத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல் சாலை அமைக்கப்பட்டு வந்தததை அறிந்த அதிகாரிகள் அப்பணியை நிறுத்தியதுடன் முறையான அனுமதி பெற்று பணி செய்யுமாறு அறிவுறுத்தி நோட்டீஸ் கொடுத்தனர்.

அனுமதி அவசியம்

அதனைத்தொடர்ந்து கேத்தி சாட்கெட் பகுதியிலும் அனுமதி பெற்றதைவிட கூடுதலாக கட்டப்பட்ட தனியார் கட்டிடத்தை ஆய்வு செய்து அப்பணிகளை நிறுத்தி அந்த கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர். இந்த நிலையில் கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாலாடா பகுதி மக்கள் நடைபாதை வேண்டி மனு அளித்துள்ளனர். அந்த மனுவின் மீது ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அது தனியாருக்குச் சொந்தமான இடமாக இருப்பதால் அந்த இடத்தை வாங்கிக் கொடுத்தால் நடைபாதை அமைத்துத்துத்ததரப்படும் என உறுதியளித்தனர். இது குறித்து உதவி இயக்குநர் பா.ராஜகோபால் மற்றும் செயல் அலுவலர் போ.நடராஜ் ஆகியோர் கூறுகையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறாமலும், அனுமதி பெற்றதைவிட கூடுதலாக கட்டிடம் கட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து