முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி முகாம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      சேலம்

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் - 4 தேர்விற்கு இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் தெரிவித்ததாவது.

இலவச பயிற்சி

 

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிக்கை எண் 23/2017 ன் படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையர், பில் கலெக்டர் உள்ளிட்ட 9,351 பணி காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.12.2017 ஆகும். எழுத்துத்தேர்வு 11.02.2018 அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கான இலவசபயிற்சி வகுப்புகள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக சிறந்த வல்லுநர்களை கொண்டு 30.11.2017 தேதி முதல் நடத்தப்படவுள்ளது. இந்த இலவசபயிற்சி வகுப்புகளில் பாடகுறிப்புகள் வழங்கப்படுவதுடன் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த இலவசபயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும் வார இறுதி நாட்களில் ( சனி மற்றும் ஞாயிறு ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் நடைபெறவுள்ளது.

புகைப்படம்

 இந்த இலவசபயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளோர் 27.11.2017 தேதிக்குள் தேர்வாணையத்திற்கு விண்ணப்பித்த ஆதாரமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் இணைத்து சேலம், ஏற்காடு ரோடு, கோரிமேட்டிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடைந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து