அரியலூரில் அரசு மருத்துவமனையில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் : தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      அரியலூர்
Ariyalur 2017 11 26

அரியலூர் மாவட்டம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைக்கான உள்நோயாளிகள் பிரிவுக் கட்டிடம் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று (26.11.2017) முதல் விடப்பட்டுள்ளதை, அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

குழந்தைகள் பிரிவு

மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, தலைமையில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி அவர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் அவர்களும் முன்னிலை வகித்தார்கள். பின்னர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் பிரசவித்த தாய்மார்களுக்கான அம்மா பரிசுப் பெட்டகங்களை 10 பேருக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட நல வாழ்வு சங்க நிதியின்கீழ் தலா ரூ.1200- மதிப்பிலான உபகரணங்களை 208 ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளைச் சேர்ந்த காய்ச்சல் தடுப்பு பணியாளர்களுக்கு அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் வழங்கினார்.

14 பரிசு பொருட்கள்

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அம்மா பரிசுப் பெட்டகங்கள் 1000 வந்துள்ளதாகவும், இதில் இன்று 10 தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் குழந்தைகளுக்கான 14 பரிசுப்பொருட்கள் அடங்கியுள்ளது எனவும், இதன் மதிப்பு தலா ரூ.1000- எனவும் அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன், வட்டாட்சியர் முத்துலெட்சுமி, நகராட்சி ஆணையர் வினோத், துணை இயக்குநர் பொது சுகாதாரம் ஹேமசந்த்காந்தி, தலைமை மருத்துவர் ரமேஷ், மருத்துவர்கள் கொளஞ்சிநாதன், மணிமாறன், சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து