Idhayam Matrimony

சங்ககிரியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் நேற்று (08.12.2017) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியினை பொது மக்கள் திரளாக பார்வையிட்டனர்.

புகைப்பட கண்காட்சி

தமிழ்நாடு  முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில், சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி சங்ககிரி பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டது. இப்புகைப்படக்காண்காட்சியில், தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா அரிசி, குடிமராமத்துபணிகள், விலையில்லா மடிக்கணினி, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டம், அம்மா குடிநீர், அம்மா குழந்தைகள் நல பெட்டகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு போன்ற எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

மேலும், சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலைத்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும், கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இதனை சுமார் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து பயன்பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து