கடலூர் மாவட்டத்தில் 16 முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி நிதியுதவி: கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      கடலூர்
cuddalur collector flag day function

கடலூர் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாளினை முன்னிட்டு 16 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் சிறார்களுக்கு கல்வி நிதியுதவி  தொகை ரூ.2,42,500- மதிப்பீட்டிலான காசோலையினை  கலெக்டர்பிரசாந்த் மு.வடநேரே,   வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர்பிரசாந்த் மு.வடநேரே,   தெரிவித்ததாவது:

படைவீரர் கொடிநாள்

முப்படைகளிலும் பணிபுரியும் வீரர்களின் தியாகத்தையும் வீரச் செயல்களையும் போற்றிடும் பொருட்டு படைவீரர் கொடிநாள் விழா ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.அவ்வாறே இவ்வாண்டும் படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூலினை இன்றையதினம் துவக்கிவைக்கப்பட்டது. இம்மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு அரசு நிர்ணயித்த கொடிநாள் வசூல் இலக்கு ரூ.43,46,100- ஆகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினைவிட கூடுதலாக ரூ.10,69,900- வசூல் செய்யப்பட்டதில் ஆக மொத்தம் ரூ.54,16,000- கொடி நாள் நிதி வசூல் செய்யப்பட்டது. இவ்வாண்டிற்கு அரசு நிர்ணயித்துள்ள கொடிநாள் இலக்கு ரூ.47,80,700- ஆகும். இம்மாவட்டத்தில் இவ்விலக்கினைவிட கூடுதலாக கொடிநாள் வசூலினை அனைத்து துறை அலுவலர்களும் செய்துதரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.  

இந்நிகழ்ச்சியில் 5 நபர்களுக்கு ரூ.25,000- மும், 4 நபர்களுக்கு ரூ.14,000-மும், 6 நபர்களுக்கு ரூ.10,000-மும் ஒரு நபருக்கு ரூ.1500-ம் ஆக மொத்தம் 16 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் சிறார்களுக்கு கல்வி நிதியுதவி  தொகை ரூ.2,42,500- மதிப்பீட்டிலான காசோலையினையும்,  2016-ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் கொடிநாள் அதிகம் வசூல் செய்த 24 துறை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர்           பிரசாந்த் மு.வடநேரே,   வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, கடலூர் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ்,  முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் லெப்.கர்னல். வே.அருள்மொழி (ஓய்வு), முப்படைவீரர் வாரிய  உப தலைவர் கமாண்டர். ஆனந்த் (ஓய்வு), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் ஆயிஷா பேகம், நல அமைப்பாளர் விஜயகுமார் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து