முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே அமைதி பேச்சுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளது, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கான பாதையைத் தடுத்துள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். துருக்கி, சவுதி , பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பலரும் ட்ரம்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், துருக்கி அதிபர் எர்டோகனை தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புடின் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். .

இதுகுறித்து ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில்,
அமெரிக்க அதிபர் டிர்ம்ப்பின்  இந்த முடிவு ஆழ்ந்த கவலையை அளித்துள்ளது. மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான பாதையை இது தடுத்துள்ளது என்றார். மேலும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து