ஊட்டி நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      நீலகிரி
10ooty-1

ஊட்டி நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா செய்தியாளர் பயணத்தின் போது பார்வையிட்டு கூறியதாவது

விரைவில் பொதுமக்கள் பயன்பாடு

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட நொண்டிமேடு 33_வது வார்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் 30 மீட்டர் தடுப்புச்சுவருடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணியினையும், காந்தல் 26_வது வார்டில் ரூ.3 லட்சம் மதிப்பில் 12 மீட்டர் தடுப்புச்சுவருடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணியினையும், தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட கோழிப்பண்ணை பகுதியில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 760 மீட்டர் சாலை பணியினையும் ஆய்வு செய்து இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

மேலும் தூனேரி பகுதியில் 4.40 மீட்டர் சாலை மற்றும் பரலட்டி பகுதியில் 3.10 மீட்டர் சாலை அமைக்க முதற்கட்டமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்யமுருகேசன், செயற்பொறியாளர் பசுபதி, நகராட்சி ஆணையாளர்(பொ)ரவி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து