பவானியில் மான் வேட்டையாட முயன்றதாக துப்பாக்கியுடன் 3 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      ஈரோடு
SY10ARRES

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் மான் வேட்டையாட முயன்றதாக துப்பாக்கியுடன் 3 பேர் பிடிப்பட்டனர்.
சத்தியமங்கலம் அடுத்த பீர்கடவு பகுதியில் மான் வேட்டையாடுவதாக வனக்குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவலையடுத்து வனச்சரக அலுவலர் வெங்கடாச்சலம், பெர்னார்டு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
புதுப்பீர்கடவில் இருந்து  காராக்கிக்கொரை செல்லும் சந்திப்பில் சந்தேகப்படும்படி வந்த மாருதி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது சாக்குப்பையில் ஹெட்லைட், தோட்டா, அரிவாள் ஆகியவற்றுடன் ஒற்றைக்குழல் துப்பாக்கியும் பதுக்கியிருந்தது தெரியவந்தது. துப்பாக்கியை ஆய்வு செய்ததில் அனுமதியின்றி வைத்திருப்பதும்  மான் வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றபோது வனத்துறையினிடம்  பிடிபட்டதை ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பாக வெள்ளாளப்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், நாராயணசாமி, விஜயகுமார் ஆகியோரை வனத்துறையினர் கைது அவர்களிடமிருந்து ஒற்றைக்குழல் நாட்டுத்துப்பாக்கி, தோட்டா, ஹெட்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்துலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி வேனையும் பறிமுதல் செய்தனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து