ஒவ்வொரு ஆசிரியரும் களம் இறங்கினால் தி.மலை மாவட்டம் முதலிடம் பிடிக்கும் : புத்தாக்கப் பயிற்சி முகாமில் நடிகர் தாமு பேச்சு

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      திருவண்ணாமலை
photo01 a

 

ஒவ்வொரு ஆசிரியரும் களம் இளங்கினால் திருவண்ணாமலை மாவட்டம் பொது தேர்வு தேர்ச்சியில் முதலிடத்தை பிடிக்கும் என்று திருவண்ணாமலையில் நடந்த புத்தாக்க பயிற்சி முகாமில் நடிகர் தாமு கூறினார்

புத்தாக்க பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமையில நடைபெற்றது. இப்பயிற்சி முகாமின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நடிகர் தாமு பேசும்போது நான் 10 ஆயிரத்துக்கு அதிகமான மேடைகளை கண்டதற்கு என்னுடைய 3ம் வகுப்பு ஆசிரியர் வேலம்மாள்தான். காரணம் உலக அளவில் பல குரலில் பேசுவதன் மூலம் 2வது இடம் பிடித்ததற்கும் அவர்தான் காரணம். எனவே ஒவ்வொரு ஆசிரியரிடமும் அளப்பறிய ஆற்றல் பொதிந்து கிடக்கிறது.

அந்த ஆற்றலை வெளிக்கொண்டு வந்து மாணவர்கள் வாழ்வுக்காக பணி செய்ய தொடங்கினால் உங்களைப்போன்று மாணவர்களும் வெற்றிபெறுவார்கள். நம்பிக்கையுடன் களம் இறங்கினால் அடுத்தாண்டு நடைபெறும் பொதுத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் பிடிக்கும் என்றார். இந்த புத்தாக்க பயிற்சி முகாமில் 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து