முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி அரசுமருத்துவகல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கானாவிலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கபட்டது. இதையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி மருத்துவகல்லூரியின் பிரதான நுழைவாயிலில்; துவங்கி வளாகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தபால்நிலையம் அருகே முடிவடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட செவிலியர் கல்லூரி மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாதைகளை கைகளில் ஏந்தியபடியும், எய்ட்ஸ் விழிப்புணர்வு தன்னார்வளர்கள் தங்களது முகங்களில் பல்வேறு வர்ணங்களால் படம் வரைந்தும் வந்தது அனைவரையும் கவர்ந்து. இதில் கலந்துகொண்டவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு சின்னங்களை பார்வையாளர்களின் கைகளில் கட்டி எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். .பேரணிக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பு,சைல்டு லைன் அமைப்பு ,தேனி அரசு மருத்துவகல்லூரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்திருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து