சென்னையில் பொருளாதார வளர்ச்சி சங்கம்: கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      வேலூர்
vit a

 

நாட்டில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கு உறுதுனையாக இருக்கும் வகையில் கல்வியாளர்கள் ,ஆராய்ச்சியாளர்கள், வணிகர்கள் பொருளாதாரா வல்லுநர்கள், வேளாண் வல்லுநர்கள் சுகாதார நிபுணர்கள் தொழில் அதிபர்கள் தொழில் முனைவோர் இணைந்து பொருளாதார வளர்ச்சி சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

வளர்ச்சி சங்கம்

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை சங்கத்தின் துணைத் தலைவரும் பிஜிபி குருப் ஆப்கம்பெனி தலைவருமான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி வரவேற்றார்.விழாவிற்கு சங்கத்தின் தலைவரும் விஐடி வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:பொருளாதார வளர்ச்சி சங்கம் என்ற அமைப்பானது நாட்டில் முதன் முதலாக இங்கு தெடங்கப்பட்டுள்ளது.மேற்கத்திய நாடுகளில் இந்திய பணக்கார நாடு என்ற நிலை உள்ளது.ஆனால் இந்தியர்கள் ஏழைகளாக உள்ளனர்.நாடு சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் ஆகியும் முன்னேற்றம் காணவில்லை 1960 ம் ஆண்டு வாக்கில் தென்கொரியா நாட்டின் தனி நபர் வருமானம் 1000 டாலராக இருந்தது இன்று 29,000 டாலராக உயர்ந்து உள்ளது.அதே போல ஜப்பான் நாட்டின் தனிநபர் வருமானம் 400 டாலராக இருந்து இன்று 38000 டாலராக உயர்ந்துள்ளது.ஆனால் இந்தியாவை அந்த நாடுகளை ஒப்பிடும் போது மிக குறைவாக உள்ளது.இந்திய நாடு வளர்ந்த நாடாக மாறிவிடும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி 3 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். அதற்கான அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

கவர்னர் பேச்சு

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொருளாதார வளர்ச்சி சங்கத்தினை தொடங்கி வைத்து சிறைப்புரையாற்றியதாவது:வளர்ந்து வரும் நம் நாடு வளர்ந்த நாடாக மாற வறுமை மற்றும் கல்லாமையை முழுமையாக ஒழிப்பது முக்கிய தேவையாக உள்ளது .பொருளாதார வளர்ச்சிக்கு தனிநபர் வருவாய் என்பது முக்கிய காரணியாக உள்ளது அதே போன்று நல்ல பொருளாதாரத்திற்கு மற்றெரு காரணியாக சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு இல்லாதது. இதற்கு அணைவருக்கும் உயர்கல்வி வழங்குவதின் மூலம் சாத்தியமாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.அவர் கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி திட்டம் நல்ல மாற்றத்தை உருவாக்கும் இந்த வரிதிட்டம் பற்றி பல்வேறு கட்டங்களாக பொருளாதார வல்லுநர்கள் அது பற்றி விளக்கி கூறி வருகின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய தொழிற் கூட்டமைப்பின் தமிழக குழு தலைவர் பி.ரவிச்சந்திரன் இந்திய தொழில் மற்றும் வணிக கூட்டமைப்பு கன்வீனர் வி.விக்ரம் தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் எஸ். ரங்கநாதன் சங்கத்தின் ஆலோசகர் முனைவர் வேதகிரி சண்முக சுந்தரம் பொருளாளர் கிருஷணா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் சங்க பொது செயலாளரும் ஜெம் குருப் நிறுவனங்களின் தலைவருமான ஆர்.வீரமணி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் கோவை வேளான் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் ராமசாமி மற்றும் ஒய்வு பெற்ற நீதிபதிகள் தொழிலதிபர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து