பெரியமேடு மற்றும் அபிராமபுரம் பகுதியில் பான்மசாலா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்த 4 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      சென்னை

 பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பெரியமேடு, வாத்தியார் கந்தப்ப தெரு மற்றும் சாமி பிள்ளை தெரு சந்திப்பில் 4 மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கணவன், மனைவியை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

4 பேர் கைது

 சந்தேகத்தின்பேரில், மூட்டையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் மற்றும் மாவா இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், தாணுபிரசாத், மற்றும் அவரது மனைவி பானு,ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கண்ணன், ராதா, சபாக், மீரஜ், டுகூக்ஷ உட்பட 13,230 பான் மசாலா பாக்கெட்டுகள் மற்றும் 4 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர்கள் மேற்படி பான் மசாலா பாக்கெட்டுகளை ஒடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.இதே போல, அபிராமபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பான்மசாலா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த குற்றவாளிகள் பிரபாகரன், அதே முகவரியைச் சேர்ந்த அசோக்குமார், ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேற்படி வீட்டிலிருந்து ரெமோ, சூப்பர் ஸ்டார், சைனி, கபாலி, ஹான்ஸ் ஆகிய 2,276 பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து