நெல்லையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற மையம்: கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      திருநெல்வேலி
nellai collector inspection tnpsc exam

திருநெல்வேலியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் போட்டித் தேர்வுகள் 4 கல்வி நிலையங்ளில் 6 மையங்களில் நடைபெற்றது. திருநெல்வேலி செயின்ட்ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 2 தேர்வு மையங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி,  நேரில் சென்று ஆய்வு செய்தார்.பின்னர் கலெக்டர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வனத்துறையின் உதவி வன பாதுகாவலர் பதவிக்கான போட்டித் தேர்வுகள் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் செயிண்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 2 தேர்வு மையங்களும், மக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 தேர்வு மையங்களிலும், சாராள்தக்கர் மேல்நிலைப்பள்ளி, செயிண்ட் சேவியர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில்  தலா 1 மையம் என மொத்தம்   6 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. நமது மாவட்டத்தில் இத் தேர்வினை 1710 எழுத விண்ணப்பித்துள்ளார்கள். தேர்வு மையங்கள் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. காவல் துறையின் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சித்தலைவர் உள்ளிட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பாளையங்கோட்டை வட்டாட்சியர் தங்கராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து