தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      தர்மபுரி
1

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது.

குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சாலை வசதி, பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளை கிணறு, தகனமேடை, குடிநீர் வசதி, புதிய மின் இணைப்பு வசதி, பட்டா வேண்டுதல், தரைமட்ட பாலம், மூன்று சக்கர வண்டி மற்றும் முதியோர் ஓய்வூதியத் தொகை மற்றும் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் என மொத்தம் 296 மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உடனடி தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தினார்.

 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மற்றும் பென்னாகரம் வட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 4 பயனாளிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவியாக தலா ரூ.50,000ஃ- வீதம் ரூ.2,00,000 இலட்சமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1,90,000- மதிப்பில் நவீன செயற்கை கால்கள் என மொத்தம் ரூ.3,90,000- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) வே.முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாஸ்கர், உதவி ஆணையர் (கலால்) மல்லிகா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர் அமீர்பாஷா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து