காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 30வது பட்டமளிப்பு விழா ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.

புதன்கிழமை, 20 டிசம்பர் 2017      சிவகங்கை
20  karikudi news

காரைக்குடி:- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 30வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரொஷித் தலைமையில் நேற்று நடைபெற்றது. 295 மாணவர்களுக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார் ஆளுநர், விழாவில் அழகப்பா செட்டியாரின் பேரன் இராமநாதன் வைரவனுக்கு கௌரவ டாக்டர் பட்டமும் பேராசிரியர் கருத்த பாண்டியனுக்கு அறிவியல் அறிஞர் பட்டமும் வழங்கினார் ஆளுநர், தமிழக உயர்கல்வி அமைச்சர் கேபி.அன்பழகன் வாழ்துறை வழங்கினார். இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன பேராசிரியர் டிபி.சிங் பட்டமளிப்பு விழா உரைநிகழ்த்தினார் நிகழ்ச்சி முடிந்ததும் பல்கலைகழக வளாகத்தில் உள்ள அழகப்பர் மியூசியத்தை ஆளுநர் பார்வையிட்டார்;, மொத்தம் 32,787 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து