முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா மென் தமிழ்ச் சொல்லாளர் தமிழ் மென்பொருள் குறுந்தகடு: கலெக்டர் மு.ஆசியா மரியம் வெளியிட்டார்

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சி மொழிப்பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று தமிழ் வளர்ச்சித்துறையின் அம்மா மென் தமிழ்ச் சொல்லாளர் தமிழ் மென்பொருள் குறுந்தகட்டினை வெளியிட்டு பேசும் போது தெரிவித்ததாவது,

குறுந்தகடு

தமிழ் மொழியானது அனைத்து மொழிகளுக்கும் முதன்மையான சிறப்பு வாய்ந்த மொழியாகும். நமது தாய் மொழி தமிழ் மொழி. அத்தகைய தமிழ் மொழியில் நாம் பேசுவதையும், கோப்புகள் எழுதுவதையும் பெருமையாக கருத வேண்டும். தமிழில் எண்ணற்ற சொற்கள் உள்ளன. எந்த சொற்களை எந்த இடத்தில் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எழுத்து பிழைகளை சரிசெய்து கொள்வதற்கு அம்மா மென் தமிழ்ச் சொல்லாளர் தமிழ் மென்பொருள் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் உருவாக்கப்பட்டு அதற்கான குறுந்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்து அலுவலகங்களுக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கோப்புகளை எழுதுவதற்கு முன்னுரிமை அளித்;திட வேண்டும். இதுபோன்ற ஆட்சி மொழிப்பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் தமிழ் அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூறுகின்ற கருத்துக்களை முழுமையாக கேட்டு அறிந்து கொண்டு தமிழில் கோப்புகளை பராமரிக்கும் முறைகளை பின்பற்றிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார்.

பலர் பங்கேற்பு

இவ்விழாவில் நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் ப.விசயலட்சுமி வரவேற்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர்.ப.அரசு பரமேஸ்வரன், நாமக்கல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தங்கம் மருத்துவமனை மருத்துவர் இரா.குழந்தைவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக்கொண்டனர். இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து