குற்றாலம் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      திருநெல்வேலி
thiruvathirai vizha kodiyetram

திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாதிரை திருவிழா

குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும், இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு முன் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கோடிமரத்தில் கொடிபட்டம் ஏற்றப்பட்டது. இதன் பின்னர் கொடிமரத்திற்கு மகாபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம்செய்தனர்பின்னர் நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள், தினமும் இரவில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜபெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 27 ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 28 ம் தேதி காலை 9 மணிக்கு நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறுகிறது. 31 ம் தேதி காலை 10 மணிக்கு சித்திரை சபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டதீபாராதனையும், வரும் ஜன.2ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திரைசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், மாலை 5 மணிக்கு திருக்கோவில் திரிகூடமண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. கொடியேற்று விழாவில் குற்றாலம் வியாபாரிகள் சங்கததின் தலைவர் காவையா, செயலாளர் அம்பலவாணன், பொருளாளர் ஜோதிமுருகன், துணைத்தலைவர் ராஜ்மெஸ் ஜி.வேல்ராஜ், இணைச்செயலாளர் பண்டாரசிவன், துணைச்செயலாளர் நாராயணன், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளையும் குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சாத்தையா, கோவில் செயல் அலுவலர் செல்வகுமாரி மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து