சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
குண்டர் சட்டத்தில் கைது
அதன்படி 1.லஷ்மணன், 2.லோகு (எ) லோகேஷ், 3.யுவராஜ், 4.ரவி (எ) ரவிச்சந்திரன் (எ) மாங்கா ரவி, 5.பிரபு (எ) பிரபாகரன், 6.பிரபு, 7.ஹரிபாபு (எ) பாபு, 8.அந்தோணி டேவிட் ஜவஹர், 9.எழிலரசன், 10.இந்துநாதன், 11.அப்பு (எ) நரேந்திரன், 12.வேலழகி, 13.செம்மஞ்சேரி ஸ்ரீதர் (எ) ஆடு ஸ்ரீதர் (எ) ஸ்ரீதர், 14.கர்ணன் (எ) கர்ணா, மேற்படி, ஒரு பெண் உட்பட 14 குற்றவாளிகளும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 14 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 14 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.