முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.எல்.ஏ., வடிவேல் கவுண்டரின் 6-வது நினைவு தினம் முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம் உருவாகக்காரணமாக இருந்தவரும் முன்னாள் எம்.எல்.., வுமான வடிவேல் கவுண்டரின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் காலை 9-மணி முதல் மதியம் 2 மணி வரை மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மருத்துவ முகாம்

தருமபுரி டவுன் மற்றும் தருமபுரி மாவட்டம் சுற்றுவட்டாரபகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இம்முகாமில் அனைத்து வயதினரும் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில் மகளிருக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய்பகுதி புற்று கண்டறியப்பட்டது. சர்க்கரை, ரத்தபரிசோதனை நடத்தப்பட்டது. இலவசமாக இ.சி.ஜி எடுக்கப்பட்டது. மேலும் இலவசமாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்பட்டது. இதோபோல் இலவசமாக சிறுநீர்க பரிசோதனையும் செய்யப்பட்டது.

இம்முகாமில் சிறப்பு பரிசோதனையும், மகளிருக்கான ஆலோசனையும் எலும்புமூட்டு, பிரச்சனைகளுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்பட்டது. இச்சிறப்பு இலவச மருத்துவ முகாமில் டாக்டர்கள் முருகேசன், மணிமாறன், கவிதாமணிமாறன், புஷ்பசேகர், செல்வம், மோகனசெந்தில், செந்தில்குமார், பாரிவேல், ஆகியோர் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சையையும் ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கினர். இம்மருத்துவ முகாமில் டி.என்.வி குழுமத்தைச்சேர்ந்த சண்முகம், செல்வராஜ், மதிவாணன், வினுபாஜ்ராஜ், தமிழ்வாணன், மணிமாறன், மகேஸ்வரி மற்றும் டாக்டர் மருகேசன், டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலவச மருத்துவ முகாம் ஏற்பாடுகளை டி.என்.வி குரூப் கம்பெனிஸ் செய்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து