கடலூர் மாவட்டம் பைத்தாம்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      கடலூர்
cuddalure collector 2017 12 27

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பைத்தாம்பாடி ஊராட்சியில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் முன்னிலையில் கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே,  தலைமையில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் மற்றும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

மனுநீதி நாள் முகாம்

மனுநீதி நாள் முகாமில் 780 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே,  வழங்கி தெரிவித்ததாவது:கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பிரதி வாரம் திட்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் பொதுமக்கள் அலுவலகத்தை தேடி வந்து மனுக்களை கொடுக்கின்றனர். இந்த சூழ்நிலையை மாற்றி மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு தீர்வு காணும் வகையில் இதுபோன்று மனுநீதிநாள் முகாம் நடைபெறுகின்றது. இம்முகாமில் பெறப்படும் மனுக்களின்மீது உரிய தீர்வு காணும் வகையில் நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2001 ம் ஆண்டு பிறப்பு விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 957 பெண் குழந்தைகள் என இருந்தது. 2011ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 833 பெண் குழந்தைகள் என குறைந்துள்ளது. பெண் குழந்தை பிறப்பு விகிதம் தமிழ்நாட்டிலேயே கடலூர் மாவட்டத்தில் குறைவாக காணப்பட்டதையடுத்து பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் படித்த இளம் பெண்களுக்கு திருமண உதவித்தொகையுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 900 பெண் குழந்தைகள் என்ற நிலையை அடைந்துள்ளோம். இதனை மேலும் அதிகரிக்க பொதுமக்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும். ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். பெண் குழந்தைகளுக்கு கட்டாய கல்வி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதேபோன்று குழந்தை திருமணங்களை ஒழிக்கவேண்டும். குழந்தை திருமணங்களை தடுக்க புகார் செய்ய ஏதுவாக 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இதன் மூலம் பெறப்படும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையில் அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற மனுநீதி முகாமில் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன் தெரிவித்தார்.இம்முகாமில் வருவாய்த்துறை சார்பில் 512 பயனாளிகளுக்கு ரூ.49,73,661- மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.60,000- மதிப்பீட்டிலம், மாவட்ட மேலாளர் தாட்கோ சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.9,17,892- மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.15,57,900- மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.86,750- மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பில் 105 பயனாளிகளுக்கு ரூ.95,670- மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.23,30,000- மதிப்பீட்டிலும், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.50,000- மதிப்பீட்டிலும், ஊராட்சி அளவிலான குழு கூட்ட அமைப்பு சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.70,000- மதிப்பீட்டிலும், சுகாதாரத்துறை சார்பில் 43 பயனாளிகளுக்கு ரூ.1,48,000- மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.16,020- மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.3,00,000- மதிப்பீட்டிலும்,  கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு  ரூ.2,68,750- மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் 780 பயனாளிகளுக்கு ரூ.1,08,74,643- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் முன்னிலையில் கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே,  வழங்கினார்.இம்முகாமில்  வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, பார்வை இழப்பு தடுப்பு சங்கம் போன்ற பல்வேறு துறைகள் தங்கள் துறை சாந்த திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைத்தனர். இதனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டு பயன் பெற்றனர்.இம்மனுநீதி நாள் முகாமிற்கு வருகை புரிந்த அனைவரையும் சார் ஆட்சியர் (பொ) தினேஷ்  வரவேற்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்த்ராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)  கூஷ்னாதேவி, இணை இயக்குநர் (வேளாண்மை) நாட்ராயன், துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் ஜவஹர்லால், உதவி இயக்குநர் (நிளஅளவை) ரவி, துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  வை.ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  ரதி (எ) லட்சுமி, தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி  ஆகியோர் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.           இறுதியில் பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் விஜய் ஆனந்த் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து