புத்தாண்டையொட்டி ஜனாதிபதி, பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      தமிழகம்
CM Edapadi2 2017 9 3

சென்னை :  புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசு, தமிழக மக்கள் சார்பில் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் 2018 ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்துக்கு சேவை செய்யும் சக்தியை இறைவன் உங்களுக்கு அளிக்க வேண்டும் என்று  பிராத்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மக்கள் சார்பில் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் 2018 ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் தேசத்துக்கு சேவை செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2018 ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி, தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2018 ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி, தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து