முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

Source: provided

புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றாது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி: ராணுவம் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. ராகுலை பாகிஸ்தான் தலைவர் புகழ்ந்து பேசியது கவலை அளிக்கிறது. நாங்கள் எங்களின் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றுகிறோம். லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். இதில் பா.ஜ., 370 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற வேண்டிய அவசியமில்லை. மக்கள் தாங்களாகவே இந்தியாவுடன் சேர விரும்புகிறார்கள். இடஒதுக்கீடு ரத்து செய்யப்படாது. தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது. பா.ஜ., ஒரு போதும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றாது. 

ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். ஆனால் எப்போது என்று கூறமுடியாது. ஜம்மு காஷ்மீர் நிலைமையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு ஏஎஃப்எஸ்பிஏ படை தேவைப்படாத ஒரு நாள் வரும். இது என்னுடைய எண்ணம். ஆனால் இதுகுறித்து உள்துறை அமைச்சகம்தான் முடிவு செய்யவேண்டும். பாகிஸ்தான் தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியாவை சீர்குலைக்க விரும்புகிறார்கள். நாங்கள் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து