முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாயர்புரம் கிராமத்தில் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்து வழிபட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      தூத்துக்குடி

இந்திய தமிழக கலாச்சாரத்தினை தெரிந்து கொள்ள சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் தூத்துக்குடியில் வேட்டி, சேலை அணிந்து  பொங்கலிட்டு  கொண்டாடினர்.

பொங்கல் திருநாள்

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் தை முதல் நாள் கொண்டாடப்படும். விளைநிலங்களில் விளைந்த கரும்பு மஞ்சள் மற்றும் காய்கறிகளை சூரிய பகவானுக்கு படைத்து புதுப்பனை வைத்து பொங்கலிட்டு வழிப்படுவது வழக்கம். இந்த பொங்கலை தமிழர்களுடன் சேர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாடினர். இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர்,  நெதர்லாந்து, இங்கிலாந்து, நார்வே, அமெரிக்கா, கனடா, லெக்ஸன் பார்க் போன்ற நாடுகளை சார்ந்த 32 வெளிநாட்டினர் இந்திய தமிழக கலாச்சாரத்தினை தெரிந்து கொள்ள தமிழகம் வந்து உள்ளனர். இந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தூத்துக்குடியை அடுத்துள்ள சாயர்புரம் கிராமத்தில் பொங்கலிட்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கதர் வேட்டி, கதர் கைத்தறி புடவை அணிந்து கரும்பு, மஞ்சள், காய்கறிகள் படைத்து புதுப்பானை வைத்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கலோ என குழவையிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். புகை மூட்டத்திலிருந்து தாங்கள் பொங்கலிட்டு சமைத்து மண்பானையில் பொங்கலிடுவது வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றும்  தமிழர்களுடன் கொண்டாடியது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், தமிழ்நாட்டின் கலாசாரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது என்றும் தமிழக மக்கள் உற்சாகமாக எங்களை வரவேற்றனர். என்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து