முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை புதிய பொலிவுடன் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைளை அரசு மேற்கொள்ளும் அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      தூத்துக்குடி
Image Unavailable

தமிழகத்தில் பிரதான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை புதிய பொலிவுடன் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைளை அரசு மேற்கொள்ளும் என தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழக விளம்பரம் மற்றும் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் நேற்று வந்தார். அவரை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கோயிலுக்கு சென்று அவர் பயபக்திடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இணை ஆணையர் பாரதி ஆகியோர் கோயில் பகுதியில் கிரி பிரகாரம் மண்டபம் இடித்த பகுதிகள், தொடர்ந்து கோயில் கலையரங்கம் பகுதியில் அகற்றப்பட்ட கடைகள்,  மேலும் வியாபாரிகளுக்கு புதிய கடைகள் கட்டப்படுவதற்காக அனுகிரக மண்டபம், ஜெயந்திநாதர் விடுதி வளாகம், நாழிகிணறு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தன. பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:2018ம் ஆண்டு புத்தாண்டில் தமிழக மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக கோயிலில் பிரார்த்தனை செய்தோம். இக்கோயிலில் கோயில் கிரி பிரகாரம் மண்டபம் இடிவதற்கு முன்பே அதனை இடிக்க வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் கோயில் நிர்வாகம் தீர்மானமாக போட்டு அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் உடனடியா பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் அதற்குள்ளாகவே எதிர்பாராமல் அசம்பாவிதம் நடந்து விட்டது. உடனடியாக தமிழக முதல்வர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அமைச்சரை அனுப்பி அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த பெண்ணிற்கு ரூ.5 லட்சம் வழங்கி, அவர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் படித்து முடிந்த பிறகு அறநிலையத்துறையில் பணி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் நடவடிக்கையாக கட்டிடங்களில் தன்மைகளை,  ஆராய்ந்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அப்படி இடிக்கும் போது, வியாபாரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அப்படி அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்றாக வேறு இடத்தில் கடைகளை மாற்றி தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் நானும், அறநிலையதத்துறை இணை ஆணையர், தக்கார், மாவட்ட செலாளர் ஆகியோர் வியாபாரிகள் கூறி இடங்களில் நேரில் பார்த்து ஆய்வு செய்தோம். பல இடங்களை பார்த்துள்ளோம். ஜெயந்திநாதர் விடுதி வளாகத்தில் 21 கடைகளும், மேலும் அனுக்கிர மண்டபம், நாழிகிணறு பக்கத்தில் நிரந்தரமாக பஸ் ஸ்டாண்டாக செயல்பட துவங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியிலும் தேவஸ்தான கேண்டின் பகுதியிலும், அனுகிரக மண்டபத்திலும், நாழிகிணற்றிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதைகளை நாங்கள் மட்டுமல்ல, வியாபாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.   கோயில் கிரி பிரகார மண்டபத்தை கட்டுவதற்கு உபயதாரர் தயாராக இருக்கின்றனர். கல் மண்டபமாக தான் கட்டப்பட வேண்டும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாராகவில்லை. விரைவில் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் வந்து திட்ட மதிப்பீடு தயார் அரசு, கோயில் நிர்வாகமும் செய்யும். இந்தியாவில் முக்கியமான கும்பகோணம் மகாமகத்தை சிறப்பாக நடத்தியதற்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதே போது இந்தியாவில் பஞ்சாப் பொற்கோயில் எல்லாம் உள்ள போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பழமை மாறாமல் பாதுகாப்பதற்காக மத்திய அரசு சிறப்பு விருது வழங்கியுள்ள கௌரவித்துள்ளது. அதே போல் திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா, திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா ஆகியவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.

தமிழகத்தில் அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் 6 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடத்தியுள்ளோம். அதே போல அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி செயல்படுத்தியுள்ளோம். இந்தியாவில் தமிழகம் தான் முன்னோடி துறையாக அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய பொலிவுடன் கோயிலை மாற்றுவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இதற்காக விரைவில் அதிகாரிகள் வர உள்ளனர். தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணிக்கு கோயிலுக்கு அடுத்தப்படியாக அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் கோயில் உள்ளது. பிரதான கோயிலான இக்கோயிலில் நிரந்த திட்டங்கள் நடக்க உள்ளது.  தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 30 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 31ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் பேசுகையில்,  டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். இது என்னுடைய துறையில் வருகிறது. இதனால் மணி மண்டபம் கட்டுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதற்குரிய இடத்தை வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசி ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் செல்லப்பாண்டியன், கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்பாபு, இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து