சுய தொழில் மேற்கொள்ள 8 மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியாக ரூ. 20 லட்சத்திற்கான காசோலை: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      கிருஷ்ணகிரி
1

 

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது.

கலெக்டர் பேச்சு

 

இக் கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வட்டாரம் வாரியாக நடத்தபடவேண்டும் இம் முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆதார் கார்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், உதவி உபகரணங்கள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலச் சட்டம்-2016 பிரிவு -51-ன் கீழ் பதிவு செய்யாத 3 தொண்டு நிறுவனங்கள், சிறப்பு பள்ளிகள், உடனடியான 15 தினங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்விஉதவித் தொகை விண்ணப்பம் பெற்று சமர்பிக்க அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கடனுதவிகள்

 

பின்பு 2017-2018 ஆம்ஆண்டிற்குதிட்டத்தின் கீழ் நேரலகோட்டை கிராமத்தை சேர்ந்த ஆர்.சரண்குமார் என்பவர் பெட்டிகடை வைக்க ரூ. 1 லட்சம் கடனுதவிக்கான ஆணையும், அத்திமுகம் கிராமத்தை சேர்ந்த வெங்கடசாமி என்பவர் மளிகை கடை வைக்க ரூ. 1 லட்சம் கடனுவிக்கான ஆணையும், அனகோடி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ரத்த பரிசோதனை நிலையம் வைக்க ரூ. 3 லட்சம் கடனுவிக்கான ஆணையும், அந்தேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லதா என்பவர் பேன்சி ஸ்டோர் வைக்க ரூ. 3 லட்சம் கடனுதவிக்கான ஆணையும், புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஜெராக்ஸ் கடை வைக்க ரூ. 1 லட்சம் கடனுதவிக்கான ஆணையும், ஓசூரை சேர்ந்த மஞ்சுராஜையன் துணி கடை வைக்க ரூ. 5 லட்சம் கடனுதவிக்கான ஆணையும், ஆம்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜா செல்போன் சர்வீஸ் கடை வைக்க ரு. 3 லட்சம் கடனுதவிக்கான ஆணையும், ராயக்கோட்டை சேர்ந்த லட்சுமி ரத்தபரிசோதனை நிலையம் அமைக்க ரூ. 3 லட்சம் கடனுதவிக்கான ஆணைகள் என மொத்தம் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி தொகை என ரூ.20 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்.

கூட்டத்தில் ஒசூர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் பலவகை மாற்றுத் திறனாளிகள் பிரிவு என்.கிருஷ்ணமூர்த்தி, மூளைமுடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பிரிவு எலியசார்லஸ், தலைமை ஆசிரியர், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, கை, கால் பாதிக்கப்பட்டோருக்கான பரிவு திரு,பிரபாகரன், ஐ.ஈ.எல்.சி.போலியோ இல்லம், அன்னை அரவிந்தர் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து