1,250 பயனாளிகளுக்கு 10 கி.கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.5.35 கோடி மதிப்பில் திருமண நிதியுதவித்தொகை கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் அ.விஜயகுமார் எம்.பி. வழங்கினர்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      கன்னியாகுமரி
collector mp issues gold cion

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயகுமார் ஆகியோர் 1,250 பயனாளிகளுக்கு 10 கி.கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.5.35 கோடி  மதிப்பில் திருமண நிதியுதவித்தொகையினை  கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

தாலிக்கு தங்கம்

தமிழக அரசு பெண்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவர்களது வாழ்வாதாரம் உயர வழிவகை செய்து வருகிறது.  அதனடிப்படையில் சமூகநலத்துறை சார்பாக படித்த ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு தாய் வீட்டு சீதனமாக தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.                     2016-17-ம் நிதியாண்டில் 7,202 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டதாரி அல்லாத 892 ஏழை பெண்களுக்கும், பட்டபடிப்பு முடித்த 358 ஏழை பெண்களும் என மொத்தம் 1,250 ஏழை பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ரூ.5 கோடியே 35 இலட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகள் திருமண நிதியுதவியாக வழங்கப்படுகிறது.  இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு ஒவ்வொரு துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தகுதியான ஒவ்வொரு ஏழை பெண்களும் இதுபோன்ற நலத்திட்டங்களை பெற்று தங்களது வாழ்வாதாரம் உயர செய்ய முன்வர வேண்டும் இவ்வாறு கலெக்டர் பேசினார்.இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பேசியதாவது:- அம்மா தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்விதமாக சமூகநலத்துறை மூலம் படித்த ஏழை பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக 4 கிராம் தங்கம் வழங்கபடுவதை  8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்கள்.   அதனடிப்படையில் முதல்கட்டமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 1,250 ஏழை பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்படுகிறது.  அம்மா அவர்களின் அரசு பெண்களின் வாழ்வாதாரம் உயர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து தகுதியான பெண்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. சுயஉதவிக்குழுக்கள் மூலம் கடன் உதவிகள், இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் போன்ற திட்டங்களை தெரிந்து கொள்வதோடு உங்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களிடம் எடுத்துக்கூறி அரசின் நலத்திட்டங்கள் பெற்று பயன்பெற வேண்டும் இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்  ஜஸ்டின் செல்வராஜ், மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி பியூலா, அரசு வழக்கறிஞர் ஞானசேகர், தமிழ்நாடு மீன்வள கூட்டுறவு இணையதலைவர்  சகாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து