வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      கடலூர்
cuddalure collector

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா எதிர்வரும் 31.01.2018 அன்று நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தலைமையில்  நடைபெற்றது.         இக்கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தெரிவித்ததாவது.

ஆலோசனைக் கூட்டம்

தைப்பூச திருவிழாவில் திரளாக கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பாதிப்பின்றி சட்டம் ஓழுங்கை பராமரித்திடவும், குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதி ஆகியவற்றை போதுமான அளவில் ஏற்படுத்திடவும், மருத்துவ உதவிக்காக சிறப்பு முகாம்களை ஏற்படுத்தவும், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்கவும், அன்னதானம் வழங்கும் இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களக்கு அறிவுரை வழங்கினார். விழா நடைபெறும் இடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்களை வைத்திருக்கவேண்டும் எனவும், தைப்பூச ஜோதி தரிசனத்தை பல்வேறு பகுதிகளில் இருந்து காண்பதற்கு வருகை புரியும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மேலும், தைப்பூச ஜோதி தரிசனத்தன்று மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கவேண்டுமென்று தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஜோதி தரிசனத்திற்கு வருகை புரியும் பக்தர்களுக்கு போதுமான அளவிற்கு குடிநீர் வசதி செய்து தருவதற்காக  குளோரினேஷன் செய்யப்பட்ட கூடுதல் சின்டெக்ஸ் தொட்டிகளை ஆங்காங்கே அமைத்துத்தர வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார். விழாவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தினையும், அன்னதானம் மற்றும் இதர உணவுப் பொருட்களையும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சத்திய ஞான சபை மற்றும் அதை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகளை அன்றைய தினம் மூடவேண்டும் என டாஸ்மாக் மேலாளர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், கடலூர் சார் ஆட்சியர் மற்றும் நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்படி பணிகளை அனைத்துத் துறைகளுடன் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டது. எதிர்வரும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பான முறையில் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் .கோ.விஜயா, சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் ஜவஹர்லால், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கலெக்டர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) சண்முகம், மாவட்ட மேலாளர் டாஸ்மாக் விஸ்வநாதன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து