நம்பிக்கை இல்லம் அனாதை குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      நாமக்கல்

நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லம் என்ற அனாதை குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சென்னை அறிவியல் நகர தலைவரான சகாயம் கலந்து கொண்டார்.

பேட்டி

விழாவில் கலந்து கொண்ட சகாயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது தமிழர்களின் மரபு திருவிழா பொங்கல், அறுவடைக்கும், கால்நடைக்கும் நன்றி சொல்லும் திருவிழா. அடிப்படையில் இந்த நாடு வேளாண் தேசம் கிராமங்களின் தேசம் இந்தியா என்று கூறுகின்றனர். விவசாயிகள் தான் இந்த தேசத்தின் முதுகெழும்பு. இன்று தேசம் முழுவதும் விவசாயிகள் வறுமையால் தத்தளித்து கொண்டுள்ளது,

வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. விவசாயிகள் வறுமையால் தற்கொலை செய்து கொள்வதும் மாண்டு போவதும் அதிகரிப்பது, இந்த தேசத்திற்கு நல்ல அறிகுறியல்ல. விவசாயிகளின் தற்கொலை சமூகத்தின் பெரிய அவமானம் விவசாயிகள் உழைக்கும் மக்கள் வளமான வாழ்வு பெற இந்த நல்ல நாளில் விரும்புகிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள் பிறக்கின்ற தை விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வளமான வாழ்வையும், எதிர் காலத்தையும் உருவாக்கும் என நம்புகிறேன் என்று கூறிய அவர் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து