முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் 177-வது பிறந்த நாள் விழா இங்கிலாந்து நாட்டில் இருந்து உறவினர்கள் வருகை

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

போடி -தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள பாலார்பட்டியில், முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களின் 177-வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களின் மகள் வழி பேத்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாய தேவைக்காகவும்  பயன்படும் வகையில் பல்வேறு இன்னல்களுக்கு பிறகு ஆங்கில அரசின் எதிர்ப்பையும் மீறி, இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது சொத்துக்களை விற்று, முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களின் 177-வது பிறந்த நாள் விழா தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பாலார்பட்டியில் வெகு சிறப்பாக பொங்கல் வைத்து படையலிட்டு கொண்டாடுவது வழக்கம்,
 இதே போல், பாலார்பட்டியில் 19-வது ஆண்டான இந்த ஆண்டும் பிறந்த நாள் விழா தப்பாட்டம், தேவராட்டம், மேளவாத்தியங்கள் முழங்க கிராம பொதுமக்கள் சார்பில் கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களின் புகைப்படத்துடன் ஊர்வலமாக சென்று அவரது நினைவு கலையரங்கம் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். வயலில் விளைந்த முதல் படி நெல்லை சாமிக்கு படைத்து வழிபடுவது போல, கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களது திருவுருவப்படத்திற்கு முன்பு வைத்து வழிபட்;டனர்.
 இவ்விழாவில் கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களின் மகள் வழி பேத்தி டாக்டர் டயான ஜிப், இங்கிலாந்து தேவாலய அமைச்சர் சாரோன் பில்லி, புனித பீட்டர் தேவாயல செயலாளர் சூசன் பெரா, ஊடக ஆய்வாளர் ஜெய்னி மோரி மற்றும் கம்பம் பள்ளதாக்கு முல்லை பெரியார் ஆயக்கட்டு நீர்நிலை பயன்படுத்துவோர் சங்க கூட்டமைப்பு தலைவர் தர்வேஸ் முகைதீன், பாலார்பட்டி ஆண்டி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து