ஜீவானந்தம் நினைவுநாள் அ.விஜயகுமார் எம்.பி., கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா சவான் மாலை அணிவித்து மரியாதை

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      கன்னியாகுமரி

பொதுவுடமை   வீரர் ப.ஜீவானந்தம்  அவர்களின் 55-வது  நினைவுநாளையொட்டி, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயகுமார்  முன்னிலையில், கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா சவான்    மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மலர் தூவி மரியாதை

தமிழக அரசு சார்பில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம், கட்டப்பட்டுள்ள மணி மண்டபங்களில் அமைந்துள்ள தலைவர்களின் சிலைகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் அவர்களது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளுக்கு, தமிழக அரசின் சார்பில் கலெக்டர்  தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயகுமார்  முன்னிலையில், கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா சவான்    மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்  என்.சுரேஷ்ராஜன் (நாகர்கோவில்), சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ஆஸ்டின் (கன்னியாகுமரி), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் கட்டுமானம்) பொறி மணிசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  தேச. கலையரசன், நாகர்கோவில் நகராட்சி ஆணையாளர்                      சரவணகுமார், அரசு வழக்கறிஞர் ஞானசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து