முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜேடர் பாளையம், காவிரி ஆற்றிலிருந்து நாமக்கல் நகராட்சிக்கு ரூ.185.24 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம்: அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி, பரமத்தி சாலை, அண்ணா நகர் காலனி பி.எஸ்.ஏ பெட்ரோல் பங்க் எதிரில் நாமக்கல் நகராட்சிக்கான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்ட பணியின் தொடக்க விழா நேற்று (21.01.2018) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமைவகித்தார். இவ்விழாவிற்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் , சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு நாமக்கல் நகராட்சிக்கான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்ட பணியினை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

குடிநீர் திட்டம்

 

நாமக்கல் நகராட்சி, நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்வு நிலை நகராட்சி ஆகும். இந்நகராட்சியானது 64.24 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது. நாமக்கல் நகராட்சியினை ஒட்டி அமைந்துள்ள சின்ன முதலைப்பட்டி, முதலைப்பட்டி, கொசவம்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, காவெட்டிப்பட்டி, நல்லிப்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் தும்மங்குறிச்சி ஆகிய 9 ஊராட்சிகள் நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு 39 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நகராட்சியில் உள்ள மக்களுக்கு ஏற்கனவே மோகனூர் காவிரி ஆற்று பகுதியில் இருந்து 3 தனித்தனி திட்டங்களின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கிடுவதற்காக தற்போது ஜேடர்பாளையம் காவிரி ஆற்று அணைக்கட்டு பகுதியில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கபிலர் குறிச்சியில் 17.66 எம்.எல்.டி சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதிலிருந்து நீர் உந்து குழாய்கள் மூலம் சுமார் 24.60 கி.மீ தூரத்தில் உள்ள தும்மங்குறிச்சியில் 9.15 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி அமைத்து அதிலிருந்து சுமார் 31.30 கி.மீ நீர் உந்து குழாய்கள் மூலம் நாமக்கல் நகராட்சியில் புதியதாக 9 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைத்து, புதிதாக நீர் பகீர்மான குழாய்கள் பதித்து குடிநீர் இணைப்புகள் அமைத்து குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவு பெற்றவுடன் நாமக்கல் நகராட்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாள் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு சுமார் 135 லிட்டர் காவிரி குடிநீர் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் நகராட்சி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக நிறைவேற்றப்படும்.

துவக்கி வைத்தனர்

நாமக்கல் நகராட்சிக்கு ஜேடர் பாளையம், காவிரி ஆற்றிலிருந்து ரூ.185.24 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணியினை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் பூமி பூஜையிட்டு பணியினை தொடங்கி வைத்தார்கள்.

கபிலக்குறிச்சியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 8 ஏக்கர் நிலம் தானமாக வழங்கிய கிரீன் பார்க் பள்ளியின் தாளாளர் சரவணன் மற்றும் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அசோகன் ஆகியோருக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, நாமக்கல் சார் கலெக்டர் சு.கிராந்தி குமார் பதி , நாமக்கல் நகராட்சி ஆணையாளர் கு.பாலசுப்பிரமணியம், நகராட்சி பொறியாளர் என்.கமலநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் செல்வதுரை, நிர்வாக பொறியாளர்கள்; என்.ஆர்.தங்கவேல், கண்ணன், மணிவண்ணன், உதவி நிர்வாக பொறியாளர் சி.மதியழகன், நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் க.பாலகிருஷ்ணன், சேலம்-நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, அரசு வழக்கறிஞர்கள் தனசேகர், சந்திரசேகர், நாமக்கல் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேகர் உட்பட முன்னாள் நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், நகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து