தேனி கலெக்டர் வெங்கடாசலம், தலைமையில் மனிதநேய வார நிறைவு விழா

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      தேனி
theni collecter 1 2 18

 தேனி.- தேனியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், மனிதநேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தலைமையில் நடைபெற்றது.
  மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையுரையில் பேசும் போது தெரிவித்ததாவது,
மனித சமுதாயத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், கலாச்சாரம் போன்றவற்றை பள்ளி மாணவ, மாணவியர்களிடையே எடுத்துரைப்பதற்கும் பல்வேறு போட்டிகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் சமூக நல்லிணக்கம் அனைவரிடத்திலும் வளர வேண்டும் என்பதனையும், எல்லோரும் சுமூகமான உறவுகளை வளர்த்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதனையும், கருத்து வேறுபாடுகளை மறந்து வளர்கின்ற சமுதாயத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு உதவிட முன் வரவேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஒரு வார காலம் மனிதநேய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இவ்விழா 24.01.2018 முதல் 30.01.2018 வரை ஒரு வார காலம் கொண்டாடப்பட்டு   நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.
 தமிழக அரசு அனைவரையும் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் அடைந்தவர்களாக மாற்றுவதற்காகவும், வளர்ந்த நாடுகளை போன்று நமது மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் கல்வி அறிவு அடிப்படையாகும் என்பதனை அடிப்படையாக கொண்டு கல்வி அறிவினை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும் பள்ளி கல்வித்துறைக்கு ஏராளமான நிதி ஓதுக்கீடு செய்து, விiயில்லா சீருடை, குறிப்பேடுகள், புத்தகம், பென்சில், பேனா, வரைபடங்கள், கணித உபகரணங்கள், மடிக்கணினி போன்றவற்றை வழங்கி வருகிறது. குழந்தைகள் கல்வி கற்கும் போதே நமது முன்னோர்கள், தாய் தந்தையர்களுக்கு மதிப்பளித்து   கற்றுத்தரும் நற்பண்புகளை வளர்த்து, தனக்கு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரும் பயன்பெறும் வகையில் வாழ வேண்டும். 
  இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சர்hபில் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, பாடல் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,    வழங்கினார். மேலும், விழாவின் முடிவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
   இவ்விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  .கிருஷ்ணவேனி  , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  ரகுபதி  , தாட்கோ மேலாளர்  .ஐரீன் கிறிஸ்டோபெல்  , காவல்துறை துணை கண்காணிப்பாளர்  அருளானந்தம்  , விழிக்கண் உறுப்பினர்  சுப்ரமணியன்  ,  சிவபாலு  ,  சுரேஷ்குமார்  , தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர்)  .ராணி   உட்பட விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து