உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் சஜ்ஜன் சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சேதுலெட்சுமிபாய் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பாக உலக எய்ட்ஸ் தினம்  கலெக்டர்                சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையிலும், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  ராஹ_ல்நாத்   முன்னிலையிலும் நடைபெற்றது.

உலக எய்ட்ஸ் தினம் 

இந்நிகழ்ச்சியில் கலெக்டர்  பேசியதாவது:-ஒவ்வொரு ஆண்டும் உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1-ம் நாள் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.  அன்றைய தினம் எய்ட்ஸ் நோயினால் ஏற்பட்ட இழப்புகளை நினைத்து பார்ப்பதோடு அல்லாமல் எய்ட்ஸ் நோயின் தாக்கத்தை குறைப்பதற்கான உறுதி மொழி எடுத்து அந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.  இந்நிகழ்ச்சி அனுசரிக்கப்படுவதின் முக்கிய நோக்கம் எய்ட்ஸ் மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும். எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும். இந்த வருடம்  ‘என் நல்வாழ்வு, என் உரிமை“ என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு உலக எய்ட்ஸ் தினம் எலக எய்ட்ஸ் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மையக்கருத்து வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, மற்றும் பங்களிப்பு மூலம் எய்ட்ஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  பொதுமக்களும் பொறுப்புள்ளவர்களாக செயல்பட வேண்டும். நமது மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், தனியார் மருத்துவமனை, நடமாடும் நம்பிக்கைமையம் என 51 இடங்களில் எச்,ஐ.விஃஎய்ட்ஸ் குறித்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் (நம்பிக்கைமையங்கள் ஐஊவுஊ) செயல்பட்டு வருகிறது.  மேலும் 3 சுகவாழ்வு மையங்கள்,               2 அரசு இரத்த சேமிப்பு வங்கிகளும்,  ஒரு கூட்டு மருத்துவ சிகிச்சை மையமும்  5 இணைப்பு ஏ.ஆர்.டி மையமும், 2 தொண்டு நிறுவனங்களும்; எச்.ஐ.விஃஎய்ட்ஸ் தடுப்பு பணியில் செயல்பட்டு வருகின்றது என கலெக்டர்  பேசினார்.முன்னதாக, கலெக்டர்  உலக எய்ட்ஸ் தினவிழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலக பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர். இவ்விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி சேதுலெட்சுமிபாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்று முடிவடைந்தது.  எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன். அறிந்ததை என் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன்.  எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்று இல்லாத சமுதாயத்தை உருவாக்கிடுவேன். இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள தன்னார்வமாக முன் வருவேன்.  எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை அரவணைப்பேன், சமஉரிமை அளிப்பேன் என உளமாற உறுதியளிக்கிறேன் என்ற உறுதிமொழியினை கலெக்டர்  தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் சிறந்த நம்பிக்கை மையத்திற்கும் எச்.ஐ.வி எய்ட்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினருக்கும் பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர்  வழங்கினார். மேலும் சமபந்தி போஜனத்தில் கலெக்டர்  கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவ நவபணிகள்) மரு. ஏ. வசந்தி, துணை இயக்குநர் (சுகாதர பணிகள்) மரு. எம்.மதுசூதனன், துணை இயக்குநர் (தொழுநோய்) மரு. கிரிஜா, மாவட்ட திட்ட மேலாளர் (எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு)    மரு. ஸ்டெல்லாஜெனட், நேருயுகவேந்திரா மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார், சி.எஸ்.ஆர். தொண்டு நிறுவன இயக்கநர்  டி.எஸ். ராம்குமார், மாவட்ட எயட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலக பணியாளர்கள் நம்பிக்கைமையம், சுகவாழ்வுமையம், இரத்தவங்கி, கூட்டு மருந்து சிகிச்சை மையம் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள்; கலந்து கொணடனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து