முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்மாமுனிவர் குமரகுருபரருக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      தூத்துக்குடி

டிவிஎம் சேவாபாலம் தொண்டுநிறுவனம் சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அத்தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் இருளப்பன் தலைமை வகித்தார்.    ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் சண்முகநாதன், வக்கீல்கள் சங்கத்தலைவர் பெருமாள்பிரபு, வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், வேளாளர் சங்க தலைவர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்தாய்வு கூட்டம்

 ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி, பள்ளி தலைமையாசிரியர் முத்துசிவன், பொறியாளர் காளியப்பன், வக்கீல்கள் சங்க செயலாளர் சங்கரலிங்கம், ஆசிரியர்கள் ராணி, தங்கராணி, அழகியசுந்தரம், காங்கிரஸ் நகர தலைவர் பாலசுப்பிரமணியன், சமூகஆர்வலர் பொன்னங்குறிச்சி அருள் உள்ளிட்ட பலர் பேசினர்.கூட்டத்தில், தமிழ் மாமுனிவர் குமரகுருபரர் சுவாமிக்கு அவர் பிறந்த பூமியான ஸ்ரீவைகுண்டத்தில் மணிமண்டபம் அமைக்கவேண்டும். ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டுவரும் சி.பா.ஆதித்தனார் நூலகத்தை டிஜிட்டல் நூலகமாக மாற்றவேண்டும். ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் படகுகுழாம் அமைக்கவேண்டும். 25ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தில் சிறப்பாக நடைபெற்று காலப்போக்கில் நடைமுறையில் இல்லாமல்போன வாரச்சந்தையை மீண்டும் துவங்கவேண்டும். ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள வெள்ளூர், கால்வாய், சிவராமமங்கலம், பேய்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்துவசதி செய்திடவேண்டும்.சுமார் 150 ஆண்டுகள் வழமை வாய்ந்த குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும். தாமிரபரணி பாசனத்திலுள்ள பாசனக்குளங்களை தூர்வாரி சீரமைத்திடவேண்டும். ஸ்ரீவைகுண்டம் பழைய பால சாலையை சீரமைத்திடவேண்டும். சிவன் கோயில் திருத்தேரை புதுப்பித்து தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், ஆசிரியை,ஆசிரியர்கள், மாணவர்கள், வணிகர்கள், சமூகஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஓய்வுபெற்ற எழுத்தர் திருமலைநம்பி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து