ஐ.சி.சி. யு-19 உலக அணியில் இந்தியர்கள் ஆதிக்கம்: ஷா, கல்ரா, கில் உட்பட 5 வீரர்களுக்கு இடம்

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      விளையாட்டு
ICCU-19 World Indian Team 2018 1 4

புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கனவு அணியில் இந்திய அணியின் பிரித்வி ஷா, கல்ரா, சுப்மான் கில் உள்பட 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நியூசிலாந்தில் நடந்த யு-19 உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதில் இந்திய கேப்டன் பிரித்வி ஷா(261 ரன்கள் சேர்த்தார். ஆட்டநாயகன் விருது மன்ஜோத் கல்ராவுக்கும்(252 ரன்கள்), தொடர்நாயகன் விருது சுப்மான் கில்லுக்கு(372 ரன்கள்) வழங்கப்பட்டது.  இந்தியாவின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் அனுகுல் ராய் 14 விக்கெட்டுகளையும், வேகப்பந்துவீச்சாளர் நாகர்கோட்டி 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இவர்கள் 5 பேரும் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஐசிசி நேற்று  யு-19 உலகக்கோப்பை கனவு அணி பட்டியலை வெளியிட்டது. இந்த அணியை முன்னாள் மேற்கு இந்திய தீவுகள் வீரர் இயான் பிஷப், முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் அஞ்சும் சோப்ரா, நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெப் குரோவ், பத்திரிகையாளர் ஷசாங்க் கிஷோர், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டாம் மூடி ஆகியோர் தேர்வு செய்தனர்.


இந்த யு19 அணியை தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ரேநார்டு வான் டான்டர் வழிநடத்துகிறார். 6 போட்டிகளில் இவர் 384 ரன்கள் சேர்த்து இருந்தார். கென்யாவுக்கு எதிராக அதிகபட்சமாக 143 ரன்கள் குவித்தவர். இவரை கேப்டனாக ஐசிசி நியமித்துள்ளது.  இந்திய அணி தரப்பில் பிரித்வி ஷா, சுப்மான் கில், கல்ரா, அனுகுல் ராய், நாகர்கோட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டான்டர் தவிர்த்து, அந்த அணியின் விக்கெட் கீப்பர் வான்டைல் மக்வீட்டு, வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்டு கோட்ஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், நியூசிலாந்து பேட்ஸ்மன் பின் ஆலன் இடம் பெற்றுள்ளார். இவர் தொடரில் 338 ரன்கள் சேர்த்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிதி(12 விக்கெட்டுகள்), ஆப்கிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் குவாயிஸ் அகமது(14 விக்கெட்டுகள்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  மேற்கிந்தியத்தீவுகள் பேட்ஸ்மன் அலிக் அதானேஸ் 12-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி யு-19 அணி வீரர்கள் விவரம் வருமாறு:

இந்திய வீரர்கள்:

பிரித்வி ஷா(இந்தியா), மன்ஜோத் கல்ரா(இந்தியா),, சுப்மான் கில்(இந்தியா), பின் ஆலன்( நியூசிலாந்து), ரேநார்டு வான் டான்டர்(தென் ஆப்ரிக்கா கேப்டன்), வான்டைல் மக்வீட்(விக்கெட் கீபப்ர் தென் ஆப்பிரிக்கா), அன்குல் ராய்(இந்தியா), கம்லேஷ் நாகர்கோட்டி, (இந்தியா), ஜெரால்டு கோட்ஜி(தென்ஆப்பிரிக்கா), குவாயிஸ் அகமது(ஆப்கானிஸ்தான்), சாஹின் அப்ரிதி(பாகிஸ்தான்) 12வீரர் அலிக் அதானேஸ்(மே.இ.தீவுகள்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து