திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ 18 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கு.ராசாமணி வழங்கினார்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      திருச்சி
pro try

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(05.02.2018) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேபாளம் நாட்டில் நடைபெற்ற குச்துச்சண்டை, சிலம்பம், ஜிம்னாஸ்டிக் மற்றும் வில்வித்தை போன்ற போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் 99 பயனாளிகளுக்கு ரூபாய் 18 லட்சத்து 57 ஆயிரத்து 959 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி. வழங்கினார்.

 நலத்திட்ட உதவிகள்

உலக விளையாட்டு மற்றும் கலை மேம்பாட்டு அமைப்பின் சார்பாக நேபாளம் நாட்டில் பொக்காராவில் 19.01.2018 முதல் 22.01.2018 வரை நடைபெற்ற குத்துச்சண்டை, சிலம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பங்கு பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்கப்பதக்கம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். பதக்கம் வென்று வந்த 13 மாணவ, மாணவியர்களையும் மாவட்ட கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் வட்டம், நாச்சிக்குறிச்சி கிராமம் தீரன் நகரை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் விபத்தில் இறந்தார் அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1 இலட்சமும், அப்துல் காதர் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து இறந்ததையொட்டி அவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 535 மதிப்பில் காசோலையினையும், மாவட்ட ஆட்;சித்தலைவர் வழங்கினார். தாட்கோ மூலம் டூரிஸ்ட் வாகனம், லோடு வாகனம் வாங்குவதற்கும் மற்றும் ரெடிமேடு கடை வைப்பதற்கும் என 4 நபர்களுக்கு ரூபாய் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 809 மானிய உதவிகளை வழங்கினார்.

பிரெய்லி கடிகாரம்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மனவளர்ச்சி குன்றிய 3 நபர்களுக்கு உதவித்தொகையும், 2 நபர்களுக்க பிரெய்லி கடிகாரமும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 42 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையும், 28 நபர்களுக்கு விதவை உதவித்தொகையும் வழங்கினார். முதலமைச்சர் அவர்களின் விபத்து நிவாரண நிதியிலிருந்து 10 நபர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 6 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உதவித்தொகைகளையும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 6 நகர்ப்புற வாழ்வாதார சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 50 ஆயிரத்து 615 மதிப்பில். மானிய உதவிகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் பாலாஜி மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து