எட்டுநாழி புதூர் ஸ்ரீகெங்கை காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சுவாமி தரிசனம்:

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      மதுரை
rpu swamy 7 2 18

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எட்டுநாழி புதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகெங்கை காளியம்மன் கோவிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
திருமங்கலம் ஒன்றியம் விடத்தக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டுநாழி புதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீகெங்கை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் மஹாகும்பாபிஷேக பெருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.இதற்காக யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைத்தப்பட்டது. இதையடுத்து நேற்று காலை யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கலசங்களை மேளதாளங்கள் முழங்கிட வேதவிற்பன்னர்கள் தலையில் சுமந்து சென்று கோவிலில் உள்ள கலசத்தில் ஊற்றி வேதமந்திரங்கள் முழங்கிட மஹாகும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு ஸ்ரீகெங்கை காளியம்மனை தரிசனம் செய்து வழிபட்டார்.முன்னதாக கோவிலுக்கு வருகைபுரிந்த அமைச்சருக்கு கோவில் நிர்வாகிகள் மற்றும் எட்டுநாழி புதூர் பொதுமக்கள் சார்பில் பட்டாசுகள் வெடித்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.இதையடுத்து கோவில் நிர்வாகத்தின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கான சிறப்பு அன்னதான நிகழ்ச்சியையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் மாநில சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்,தலைமை கழக பேச்சாளர் தமிழரசன் மற்றும் கட்சிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து