ரூ.80.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      மதுரை
mdu corparation 9 2 18

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 வார்டு எண்.62 மீனாட்சி நகர், வார்டு எண்.57 அனுப்பானடி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 வார்டு எண்.62 மீனாட்சி நகர், வைகை தெரு, தாமரை தெரு, கவிமணி விநாயகர் கோவில் தெரு, சௌடாம்பிகை அம்மன் கோவில் தெரு, ராமமூர்த்தி தெரு, ராமச்சந்திரன் தெரு, சக்தி விநாயகர் கோவில் தெரு, பெத்தனாட்சி அம்மன் கோவில் தெரு, சுந்தர விநாயகர் கோவில் தெரு, காமராசர் தெரு, சுபாஷ் சந்திர போஸ் தெரு ஆகிய தெருக்களில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்ச் சாலை பணியினையும், வார்டு எண்.57 அனுப்பானடி, அய்யனார் கோவில் தெருவில் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மீனாட்சிநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் கட்டிடத்தில் மாநகராட்சி கட்டிட வரைபட அனுமதி குறித்து ஆய்வு செய்தார். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை பார்வையிட்டு அனுமதியை விட கூடுதலாக இருந்தால் நோட்டீஸ் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். காமராசர் தெருவில் காலியிடங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். குப்பைகளை கொட்டி எரிக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்குமாறும், அங்குள்ள காலியிடங்களை சுத்தமாக பராமரிக்காத உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்  .ரமேஷ், செயற்பொறியாளர்  சந்திரசேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) .இந்திராதேவி, உதவி செயற்பொறியாளர்  ஷர்புதீன்,  சுகாதார அலுவலர்  .நாகராஜ், சுகாதார ஆய்வாளர்கள்   வெங்கடசாமி,  ஓம்சக்தி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து