வாலாஜாவில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் விழா

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      வேலூர்
wj

 

வாலாஜாவில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் வாலாஜா சுங்க சாவடி அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கினங்க வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

விண்ணப்ப படிவம்

நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி, கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. லோகநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் முகமதுஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உறுப்பினர் படிவம் வழங்கி சிறப்புறையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி இணைசெயலாளர் கலைசெல்வி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் அப்பு, ராமு, ஜம்புகுளம் கூட்டுறவு வங்கி தலைவர் பெல் கார்த்திகேயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முல்லைவேந்தன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் வேதகிரி, சித்ராசந்தோஷம், நகர செயலாளர்கள் கோகன், என்.கே.மணி, இப்ராகிம் கலிலுல்லா, ஒன்றிய செயலாளர்கள் பூங்காவனம், தாஜ்புரா குட்டி, தலங்கை குப்பன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பூண்டி பிரகாஷ், உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து